கான்பூரை சேர்ந்த ஒரு சிறுவன் தன் பள்ளி தோழனை காதல் பிரச்சனை காரணமாக கத்தியை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13 வயது சிறுவன்:


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்த மாணவன், சக மாணவனை கொலை செய்வதற்கு முன்னர் பல யூடியூப் வீடியாேக்களை பார்த்து எப்படி கொலை செய்ய வேண்டும் என கற்றுக்கொண்டது தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | ஹரியானா வன்முறைக்கு காரணமே இவர்தான்... ஆனால் கைவிரிக்கும் முதல்வர் - முழு பின்னணி!


காதலுக்காக கொலை..!


கான்பூரை சேர்ந்த ஒரு பள்ளியில், தற்போது கொலையான மாணவனும் அவனை கொலை செய்த மாணவனும் ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவியை இருவரும் விரும்பியுள்ளனர். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் சண்டையில் ஈடுபடுவது, அடிக்கடி வாய்ச்சண்டையில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் இருவரும் ஈடபட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இரு தினங்களுக்கு முன்பு தங்கள் வகுப்பறையிலேயே சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 


கழுத்தில் வெட்டு:


சண்டையின் போது அந்த சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனின் கழுத்தில் கோடு போட்டுள்ளார். இதையடுத்து வெட்டுப்பட்ட இன்னொரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்து கொலை செய்த மாணவனை பிடித்து விசாரித்தனர். 


யூடியூப்பை பார்த்து..


கொலை செய்த மாணவனை போலீஸார் பிடித்து விசாரித்ததில் இருவரும் காதலுக்காக சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கழுத்தில் ஆழமாக ஏற்பட்ட வெட்டு உள்பட உடலில் 6 இடங்களில் 6 உடற்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், கழுத்தில் ஏற்பட்ட வெட்டு காரணமாகத்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த மருத்துவர்கள், “ஒருவரை கொலை செய்ய இது மிகவும் ஏதுவான வழி, இதை அச்சிறுவன் க்ளீனாக செய்துள்ளான்” என கூறியுள்ளனர். கொலை செய்த அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு எப்படி கொலை செய்ய வேண்டும் என்று தான் யூடியூப்பை பார்த்து கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளான். இது போலீஸாரையே அதிர செய்துள்ளது. 


அடிக்கடி சண்டை நிகழும் போது, உன்னை கொலை செய்து விடுவேன் என சக மாணவன் மிரட்டியதாகவும் அதனால், அவன் என்னை கொலை செய்வதற்கு முன்பு நான் அவனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். கொலை செய்வதற்கு 4 வாரங்களுக்கு முன்பிருந்தே “கொலை செய்வது எப்படி?” என யூடியூப் தளத்தில் தேடி அது குறித்து பல வீடியோக்களை பார்த்ததாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதற்காக தனது உறவினர் ஒருவரின் செல்போனை பயன்படுத்திக்கொண்டதாகவும் கத்தியை வைத்து கழுத்தை அறுப்பதுதான் ஒருவரை கொல்வதற்கு மிகவும் பயணுள்ள வழி என தான் தெரிந்து கொண்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.


“என்னை அவன் கொன்றுவிடுவான் என நான் பயந்தேன். அதனால் எப்போதும் சண்டைக்கு ரெடியாக இருந்தேன். கடந்த திங்கட்கிழமையின் போது கண்டிப்பாக என்னை கொன்றுவிடுவேன் என அவன் என்னை மிரட்டினான். நான் அவனை கொல்லவில்லை என்றால் அவன் என்னை கொன்றுவிடுவான் என நினைத்து நான் முதலில் அவனை கொன்றுவிட்டேன்” என அச்சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். 


சிறுவனின் நிலை:


கொலை செய்த சிறுவனின் மீது, கொலையான சிறுவனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். இதனால், அந்த சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவனின் ஆதார் கார்டின் படி, அவனுக்கு 13 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வயது பரிசோதனை செய்த பிறகே சிறுவனின் வயது என்ன என்று தெரியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த பரிசோதனைக்கு பிறகு, அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுவான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Explainer: வதந்தியால் வெடித்த மத வன்முறை... ஹரியானாவில் என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ