லக்னோ: கான்பூரில் (Kanpur Encounter) எட்டு போலீசார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கேங்க்ஸ்டார் விகாஸ் துபேவை (Vikas Dubey) காலையில் உஜ்ஜைனில் (Ujjain) கைது செய்யப்பட்டதை அடுத்து, மாலையில் அவனது மனைவி மற்றும் மகனை போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். லக்னோவின் கிருஷ்ரிஷ்ணநகர் பகுதியைச் சேர்ந்த மனைவி ரிச்சா மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணா நகரில் உள்ள நாராயண் பூரி வட்டாரத்தில் உள்ள பகுதியில் இருவரும் பிடிபட்டனர். போலீசார் வருவதை அறிந்து ஓட்டம் பிடித்த விகாஸின் வேலைக்காரனையும் காவல் துறை கைது செய்தது. ரவுடி விகாஸ் துபே பிடித்து கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் பரிசு வழங்குவதாக காவல்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படியுங்கள் | Kanpur Encounter: விகாஸ் தூபே - பரபரப்பான திருப்பங்கள்


உஜ்ஜைனை கைது செய்த விகாஸ் துபேவிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் இருந்த வேறு சில சந்தேக நபர்களை போலீசார் அறிந்து கொண்டனர். உஜ்ஜைனின் பல பகுதிகளில் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். தகவல்களின்படி, துபேவுடன் வேறு சிலர் இருந்துள்ளனர். அவர்கள் உஜ்ஜைனில் தங்கியிருந்தனர். மேலும் இரண்டு கார்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு உள்ளூர் நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் விசாரிக்கப்பட்டு வருகிறது.


இதையும் படியுங்கள் | ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் எப்படி கைது செய்யப்பட்டார்- முழு விவரம்


உத்தரபிரதேச (UP Police) காவல்துறை தவிர, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா காவல்துறையினரும் தலைமறைவான விகாஸ் துபேவை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 


முன்னதாக, இன்று காலை கான்பூர் என்கௌன்டர் (Encounter) வழக்கில் காவல் துறையினரால் வலை வீசி தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனிலிருந்து (Ujjain) பிடிபட்டான். கோயிலுக்கு வந்த விகாஸ் தூபேவை அடையாளம் கண்ட கோயில் பாதுகாவலர் அவனை பிடித்து வைத்து, பின்னர் காவல் துறைக்கு தகவல் அளித்ததாகத் தெரிகிறது. அதன் பின் அங்கு வந்த உஜ்ஜைன் போலிஸ் விகாஸ் தூபேவை கைது செய்த உஜ்ஜைன் காவல் துறையினர்.


இதையும் படியுங்கள் | Kanpur Encounter: விகாஸ் தூபேவின் கூட்டாளி அமர் தூபே சுட்டுக்கொல்லப்பட்டான்.


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் தூபேவைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது குற்றவாளிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா மற்றும் நிலைய பொறுப்பாளர் உட்பட 8 போலீசார் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.