ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

உத்தரபிரதேச கான்பூரைச் சேர்ந்த ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
zee media

உத்தரபிரதேச மாநிலம் (UP) கான்பூரைச் சேர்ந்த ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்பூர் என்கௌன்டர் (Encounter) வழக்கில் காவல் துறையினரால் வலை வீசி தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனிலிருந்து (Ujjain) பிடிபட்டான். உஜ்ஜைனிலிருக்கும் மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு விகாஸ் வந்த போது அவன் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயிலுக்கு வந்த விகாஸ் தூபேவை அடையாளம் கண்ட கோயில் பாதுகாவலர் அவனை பிடித்து வைத்து, பின்னர் காவல் துறைக்கு தகவல் அளித்ததாகத் தெரிகிறது. அதன் பின் அங்கு வந்த உஜ்ஜைன் போலிஸ் விகாஸ் தூபேவை கைது செய்த உஜ்ஜைன் காவல் துறையினர், உடனடியாக இந்தத் தகவலை மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு அளித்தனர். முதலமைச்சர் சௌஹான் உடனடியாக தொலைபேசி மூலம் உத்த்ரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு இந்த செய்தியை அளித்ததாகத் தெரிகிறது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் தூபேவைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது குற்றவாளிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா மற்றும் நிலைய பொறுப்பாளர் உட்பட 8 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்கள் தங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழு அங்கு சென்றனர். 

Also Read | Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்

பல மாவட்டங்களில் இரவு பகலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை இறுதியாக இன்று காலை நிறைவடைந்தது.

முன்னதாக, விகாஸ் தூபேவின் (Vikas Dubey) நெருங்கிய உதவியாளரான அமர் தூபே (Amar Dubey)  புதன்கிழமை (ஜூலை 8) ஹமீர்பூரில் நடந்த மோதலில் உத்தரபிரதேச போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அமர் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளியாவான். உத்தரபிரதேச (UP)  காவல்துறையின் சிறப்பு பணிக்குழு நடத்திய என்கௌண்டரில் அமர் கொல்லப்பட்டான். அமர் விகாஸ் துபேயின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக இருந்ததோடு, எப்போதும் தன்னுடன் பல ஆயுதங்களை வைத்திருந்தான். விகாஸ் தூபேயின் தலைக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Kanpur Encounter: விகாஸ் தூபேவின் கூட்டாளி அமர் தூபே சுட்டுக்கொல்லப்பட்டான்.

எட்டு போலீசார் கொல்லப்பட்ட கான்பூர் என்கௌண்டர் வழக்கில் அமர் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தான். அமர் மேலும் பல வழக்குகளுக்காகவும் தேடப்பட்டு வந்தான். அதே வேளையில், ஃபரிதாபாதிலிருந்து விகாஸ் துபேயின் நெருங்கிய உதவியாளரை ஹரியானா காவல்துறை கைது செய்தது. ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 87 இல் விகாஸ் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

விகாஸ் துபேவுக்கான வேட்டையில் உ.பி  காவல்துறை ஹரியானா போலீசாருடன் இணைந்து பணிபுரிந்தது வந்தது.   ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விகாசைத் தேடும் பணி நடந்தது.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள பத்கால் சௌக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சசாரம் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ஹரியானா போலீஸ் குற்றப்பிரிவு சோதனை நடத்தியது. எனினும் போலீசாரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகள், ஹோட்டல் வளாகத்தில் விகாஸ் இருப்பதைக் காட்டியதை அடுத்து காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகளின் டி.வி.ஆர்-ஐ போலீசார் அவர்களுடன் எடுத்துச் சென்றனர்.

விகாஸ் தூபேவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் உத்த்ரப்பிரதேச காவல்துறையின் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஈடுபட்டிருந்தன. ரவுடி (gangster) விகாஸ் தூபேவுக்கு எதிராக சுமார் 70 கிரிமினல் வழக்குகள் உள்ளன.