டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த நீர்த்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு கபில் மிஸ்ரா, அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகூறினார். அதாவது அக்கட்சி முக்கியத் தலைவரான அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன் என குற்றம் சாட்டினார்.


ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5_வது நாளாக அவருடைய போராட்டம் தொடர்ந்தது. 


இன்று கபில்மிஸ்ரா செய்தியார்களிடம் கூறியதாவது:


டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டார். மொகாலா கிளினிக் மோசடியை வெளிப்படுத்துவேன். இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். 


45 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி இணையதளத்தில் வெறும் ரூ.19 கோடி மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு தவறான வங்கி விபரத்தை தெரிவித்துள்ளது. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்துள்ளது. 


அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் பிற பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


அனைத்து ஆதாரங்களை சிபிஐ-யிடம் ஒப்படைப்பேன் எனகூறினார். அவர் செய்தியார்களிடம் பேசிக்கொண்டே இருக்கும் போதே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.