தொலைத் தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் கடன் தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் மத்திய அரசைத் தாக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக கபில் சிபில் தெரிவிக்கையில்.,தொலைத் தொடர்புத் துறை சம்பாதிக்கும் ஊடகம் அல்ல, இந்தத் துறைகளை வருவாய் ஈட்டுவதாக அரசாங்கம் பார்க்கக்கூடாது, மாறாக இந்தத் துறைகள் மக்களுக்கு வசதியை அளிக்கும் துறையாகவே நாம் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொலைத் தொடர்புத் துறைக்கு நேரம் கொடுக்க வேண்டும், அரசாங்கம் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த அவகாசம் கொடுக்க வேண்டும், இந்தத் துறையிலிருந்து சம்பாதிப்பது பற்றி சிந்திக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து, தொலைத் தொடர்புத் துறையில் ஏன் சுமார்  8 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது என்று விளக்கிய கபில் சிபல், பாஜக எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒரு பெரிய வேலை செய்தது, இதன் காரணமாக அந்நிய முதலீடு வரவில்லை, எனவே தொலைத் தொடர்புத் துறையின் இவ்வளவு பெரிய கடனுக்கு பாஜக தான் பொறுப்பு என்று தெரிவித்தார். இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக AGR காரணமாக தொலைத் தொடர்புத் துறையின் நிலை மிகவும் மோசமானது என்று தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களே தெரிவித்துள்ளார் எனவும் கபில் சிபில் மேற்கோள் இட்டு காட்டினார்.


தொலைத் தொடர்புத் துறையின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) 2018-19 நிதியாண்டில் காலாண்டு குறைந்து ரூ.1.39 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 2016-17 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ரூ .1.85 லட்சம் கோடியாக இருந்தது. தொலைத் தொடர்புத் துறை எவ்வளவு மோசமானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதன் காரணமாகவே இந்தத் துறையில் சுமார் ரூ.8 லட்சம் கோடி கடன் உள்ளது, இதில் பாரதி ஏர்டெலின் ரூ.1.16 லட்சம் கோடி, வோடபோனின் ரூ.99,300 கோடி கடன் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.