கர்நாடக மாநிலம் குந்தாபூரில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பைந்தூரில் இருந்து குன்டாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டான் பாஸ்கோ பள்ளி மாணவ-மாணவிகள் ஏற்றிக் கொண்டு சென்ற மாருதி ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில்,பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.