கர்நாடகாவில் விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், மேகதாது குறுக்கே அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இதையொட்டி காலை 10 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக சென்று விதான சவுதாவை முற்றுகையிடுகின்றனர். 


இன்று அதிகாலை, தமிழகப் பேருந்துகள் கர்நாடக-தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன. 


பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சுமார் 15,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.