மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் வசிக்கும் கர்நாடக பிரஜைகள் வரும் மே 31 வரை மாநிலத்திற்குள் வர தடை செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒப்புதலுடன் மட்டுமே பயணிகளின் நடமாட்டம் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறிய ஒரு நாள் கழித்து இந்த உத்தரவினை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.


குறிப்பாக இந்த 3 மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கர்நாடகாவில் 50 சதவீத வழக்குகள் இந்த மாநிலங்களிலிருந்து திரும்பி வருபவர்களிடமிருந்து வந்தவை என்பதன் அடிப்படையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சேவா சிந்து பயன்பாட்டின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று முதல்வர் எடியூரப்பா தெளிவுபடுத்தியுள்ளார்.


எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை இந்த மாநிலங்களில் சிக்கி வீடு திரும்பக் காத்திருந்த பல கன்னடிகர்களிடமும், வெளிமாநிலத்தில் வேலை செய்பவர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே பலர் ஏற்கனவே மும்பையிலிருந்து கர்நாடகா மற்றும் பிற நகரங்களுக்கும் செவ்வாய்க்கிழமை பயணத்திற்கு ஒப்புதல் பெற்றிருந்த நிலையில், மேற்கொண்டு அவர்கள் பயணம் செய்ய முடியுமா? இல்லையா? என குழப்பத்தில் உள்ளனர்.


இதற்கிடையில் மாநிலத்தில் சில தளர்வுகளுடன் அலுவலகங்களும் இப்போது திறக்கப்பட்டுள்ளன, மேலும் தங்கள் ஊழியர்களை பணியில் சேர அழைத்துள்ளன.  எனினும் முழு அடைப்பு காரணமாக சொந்த மாநிலம் சென்ற பலர் மீண்டும் கர்நாடாக திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 


சுவாரஸ்யமாக, முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் கேரளாவிலிருந்து பயணம் கூட தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார், ஆனால் பின்னர் கேரளா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார். இருப்பினும், நிலைமை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.