Ramesh Jigajinagi, Karnataka BJP MP News : விஜயபுரா எம்.பி.யும் பாஜக தலைவருமான ரமேஷ் ஜிகஜினகி, மத்திய அமைச்சர்கள் குழுவில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும், நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன் என்றும் தெரிவித்திருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து அவர் பேசும்போது"தென்னிந்தியா முழுவதிலும், ஏழு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் எம்.பி. நான் தான். என் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள். அனைத்து உயர் சாதியினரும் கேபினட் அமைச்சர்கள் ஆனார்கள். தலித்துகள் பாஜகவை ஆதரிக்கவில்லையா?. எனக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையை கொடுத்திருக்கிறது என ஜிகாஜினகி விஜயபுரத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக எம்பி அதிருப்தி குறித்து விளக்கம்


தொடர்ந்து பேசிய ஜிகாஜினகி "நான் எனக்காக கேபினட் பதவியை தேடவில்லை. நான் எனது தொகுதிக்கு திரும்பியபோது பலர் என்னை விமர்சித்தனர். பாஜக தலித்களுக்கு எதிரானது என்று பலர் என்னை முன்பே எச்சரித்துள்ளனர். மத்தியில் நான் அமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது. இது நியாயமா, அநியாயமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க | பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பணம் வந்தவுடன் காதலனுடன் தப்பியோடிய 11 மனைவிகள்!


ரமேஷ் ஜிகாஜினகி ஏழாவது முறை வெற்றி


ரமேஷ் ஜிகாஜினகி, சிக்கோடி தொகுதியில் மூன்று முறையும், பிஜப்பூர் தொகுதியில் நான்கு முறையும் தொடர்ந்து ஏழு முறை எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். அவரது நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில், அவர் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததில்லை. 2024 பொதுத் தேர்தலில், கர்நாடகாவின் பிஜாப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ரமேஷ் ஜிகஜினகி 77229 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 672781 வாக்குகள் பெற்றிருந்தார். அவரின் இந்த அதிருப்தி அம்மாநிலத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


பாஜக அதிக இடங்களில் வெற்றி


கர்நாடகாவில் 2024 பொதுத் தேர்தலில் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 17 எம்பி தொகுதிகளிலும், காங்கிரஸ் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2024 பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் ஜேடி-எஸ் கூட்டணி அமைத்தன. பாஜக 25 இடங்களிலும், ஜேடி-எஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டன.


மத்திய அமைச்சரவையில் கர்நாடக எம்பிக்கள்


மோடி அமைச்சரவை 3.0ல் கர்நாடகத்தைச் சேர்ந்த இரு தலைவர்கள் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். மதச்சார்பற்ற ஜனா தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, கனரக தொழில்கள் மற்றும் உருக்குத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ராஜ்யசபாவில் கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆட்சியிலும் அவர் நிதியமைச்சராக இருந்தவர்.


மேலும் படிக்க | Kerala Lottery Result: ஸ்திரீ சக்தி லாட்டரி SS-423 முடிவுகள் வெளியானது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ