கர்நாடக மாநிலம் மண்டியாவில் திருமணம் முடித்த கையாடு பறிட்சை அறையில் தேர்வு எழுத சென்ற மணப்பெண் குறித்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் மண்டியா லோக் சபா இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் நாள் அன்று நடைபெறவிருந்த மைசூர் பல்கலை கழக தேர்வுகள் நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மைசூர் பல்கலை., கிரேட் கல்லூரியில் பட்டய படிப்பு பயின்று வருபவர் ஸ்வேத்தா. இவருக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே திருமண தேதி நிச்சையக்கப்பட்டது, ஆனால் திடீரென இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஸ்வாதாவின் திருமண நாள் அன்றே அவர் தேர்வு எழுத வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.


இதன் காரணமாக நேற்றைய தினம் காலை 7.45 - 8.45 மணி லக்கணத்தில் திருமணத்தினை முடித்த ஸ்வேத்தா, உடனடியாக தேர்வு எழுத தேர்வறைக்கு சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது கணவரும் கல்லூரிக்கு சென்று அவர் தேர்வு எழுதும் வரை காத்திருந்து அழைத்து வந்துள்ளார்.


இதுகுறித்து ஸ்வேத்தா தெரிவிக்கையில்... நான் தேர்வுக்கு நன்றாக படித்திருந்தேன், எனவே இந்த வாய்ப்பினை பறிகொடுக்க விரும்பவில்லை. நான் தேர்வு எழுத என் பெற்றோர், எனது கணவரின் பெற்றோர் அனுமதி அளிக்க என் கணவர் உதவியுடன் தேர்வு எழுத வந்தேன். இந்த தருணம் என்னால் மறக்க முடியாத தருணம், இந்த பரீட்சையில் முதல் மதிப்பெண்னுடன் தேர்ச்சி பெறுவேன் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.