கர்நாடகாவில் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 5 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே வாக்குப்பதிவு சாவடிகளில் மக்கள் பெரும் கூட்டமாக வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். அப்பொழுது பாம்பு ஒன்று வாக்குசாவடியில் புகுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தி நிறுவனம் ஏ.ஐ.ஐ. கொடுத்துள்ள தகவல்களின்படி, ராமநகரம் தொகுதியில் உள்ள மோட்டேடோட்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குசாவடி எண் 179-ல் மக்கள் வரிசையாக நின்று வாக்களித்து வந்த நிலையில், அப்பொழுது திடீரென்று பாம்பு ஒன்று வாக்குச் சாவடிக்குள் புகுந்தது. இதனைப்பார்த்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரபப்பு ஏற்ப்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. சில பேர் சேர்ந்து அங்கிருந்த பாம்பை அகற்றினர். பின்னர் மீண்டும் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


 



தற்போதைய கர்நாடகா முதலைமைச்சர் குமாரசாமி, கடந்த சட்டமன்ற தேர்தல் ராமநகரம் தொகுதி மற்றும் சென்னபட்டனா தொகுதி என இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தொகுதியில் போட்டியிட்டதால், ராமநகரம் தொகுதியில் ராஜினமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.