தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் கைவிரிப்பு!
தமிழக முதல்வர் 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக டெல்டா பகுதிகளின் விவசாயிகளுக்கு வேளாண்மைக்காக கூடுதலாக சுமார் 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்கக்கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடகத்திற்கே போதிய தண்ணீர் இல்லாத சூழலில் தமிழத்திற்கு நீர் திறக்க முடியாது எனவும் சித்தராமையா கூறியுள்ளார். விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தண்ணீர் திறந்துவிட சித்தராமையா மறுத்துள்ளார்.