பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் HD குமாரசாமி சந்திப்பு!
பிரதமர மோடி அவர்களை கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்கள் இன்று நேரில் சந்தித்து கர்நாடக வெள்ள நிவாரண நிதி குறித்த கடிதத்தினை வழங்கினார்!
பிரதமர மோடி அவர்களை கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்கள் இன்று நேரில் சந்தித்து கர்நாடக வெள்ள நிவாரண நிதி குறித்த கடிதத்தினை வழங்கினார்!
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மழை வெள்ளம் காரணமாக பல குடியிறுப்புகள் சர்வ நாசம் அடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை கர்நாடக அரசு நாடியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு 100 கோடியாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நியையில் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள HD குமாரசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கடிதத்தினை வழங்கினார்.
இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி அவர்களுக்கு "The Open Eyes: A Journey through Karnataka," என்னும் புத்தகத்தினையும் அவர் பரிசளித்துள்ளார். இந்த புத்தமானது, பிரபல எழுத்தாளர் சர் டோம் மோரிஸ் அவர்களால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.