அரசியல்வாதிகளை ஊடகங்களுக்கு கிண்டல் செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் 17-வது மக்களவையின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  


கர்நாடக முதல்வர் இந்த மாநிலத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் ஆயுளை பற்றி சந்தேகம் எழுப்பியது சில செய்தி சேனல்கள் தாக்குதலுக்கு ஆளானார். காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் "நலன்களை" தனது தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றும் என்று குமாரசுவாமி குறிப்பிட்டார்.


கர்நாடக முதல்வர் HD குமாரசாமி ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக கூறினார்.  மைசூரிவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குமாரசாமி இது குறித்து கூறுகையில்; “ எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த நீங்கள் (மீடியா) யார்? எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?.



எங்களை சிறுமைப்படுத்த நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு பயம் இல்லை, கவலையுமில்லை. ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்  கொண்டு வர ஆலோசித்து வருகிறேன்” என அவர் கூறினார்.