கர்நாடகா: கர்நாடக மாநிலம் பெல்கம் பகுதியில், KPME சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களிடம், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

KPME சட்டத்தினை எதிர்த்து தனியார் மருத்துவமனைகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள், கடந்த நவ., 13-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கர்நாடகா தனியார் மருத்துவ நிறுவனங்கள் (KPME) சட்டத்திற்கு எதிரான இப்போராட்டம் கர்நாடக மாநிலம் பெல்கம் பகுதியில், தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.


இந்நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.



முன்னதாக, போராட்டத்தில் கலந்துக்கொண்ட டாக்டர் ரவீந்திரா, IMA கர்நாடகா தலைவர் போராட்டம் குறித்து கூறுகையில், KPME சட்டம் குறித்த எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை உண்னாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.