கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் CCTV காட்சி ஆதாரத்தைக் கொண்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர் பி.லங்கேஷ்-ன் மூத்த மகள் கவுரி லங்கேஷ், பெங்களூருவின் ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் கொலையாளிகள் தப்பியோடி விட்டனர். 



இந்த கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்தார். பின்னர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் ஓவியங்களை, கர்நாடக போலீஸ் சிறப்பு புலனாய்வு துறை வெளியிட்டது.


இந்த கொலை வழக்கில் ஆதாரமாக கருத்ப்பட்ட CCTV வீடியோ பதிவினையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.



இந்த CCTV கட்சியின் அடிப்படையில், மராத்தி மொழி பேசும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறை தற்போது அறிவித்துள்ளனர். எனினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின்னரே கொலை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.