கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தற்போது வரை 113 தொகுதிக்கு மேலாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.  சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரகுமூர்த்தி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகரில் பாஜகவிற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.  தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட பாஜகவுக்கு மூன்றாம் இடம் பெற்றுள்ளது.  புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 962 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.  கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான KGF தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலையில் உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.


பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவு


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தங்களது வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு அழைத்து வர காங்கிரஸ் திட்டம் தீட்டி உள்ளது.  கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.


தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, தற்போது பாஜக 6 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. மங்களூரு தெற்கு, மங்களூரு வடக்கு, பண்ட்வாலா, சூல்யா, மூடுபிதிரே, பெல்தங்கடி ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையிலும், மங்களூரில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. மங்களூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் யுடி காதர் 15,246 வாக்குகள் முன்னிலையில் நீடித்துள்ளார்.


வினய் குல்கர்னி மன்னாடே ஆர்வலர்களின் வெற்றி விழா


தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள்


தார்வாட் கிரிஷி விஸ்வ வித்யாலயாவில் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்


வினயா குல்கர்னி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வண்ணம் வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்


மேலும் படிக்க | Election Result 2023: 224இல் எத்தனை காங்கிரசுக்கு? பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ