கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகளை விசா ரிக்க மகதாயி நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. கர்நாடக அரசு மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி. நீரை குடிநீருக்காக கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என மகதாயி நடுவர் மன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. மகாராஷ்ட்டிரா, கோவா, கர்நாடகா இடையிலான மகதாயி நதி நீர் பிரிப்பு தொடர்பாக கர்நாடகாவுக்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மகதாயி நீர் பிரிப்பு தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் இன்று மாநிலம் முழுவதும் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. வட கர்நாடகாவில் மத்திய அரசின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த அரசு பேருந்துகள்தாக்கப் பட்டன. தார்வாட், கதக் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமுற்றனர்.
இதையடுத்து முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பா விதங்களை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் வட கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.