கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே 125 அடி உயரத்தில் காவிரித்தாய் சிலை அமைக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் தலைமையில் பெங்களூரில் நடைபெற்றது.


அப்போது கிருஷ்ணராஜசாகர் அணை அருகே ஒரு அருங்காட்சியகம் கட்டவும், அருங்காட்சியகத்தின் மேல்தளத்தின் மீது 360அடி உயரங்கொண்ட இரண்டு கண்ணாடிக் கோபுரம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அருங்காட்சியகம், கண்ணாடிக் கோபுரம் ஆகியவற்றின் இடையே 125அடி உயரத்தில் காவிரித் தாய் சிலை அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. கண்ணாடிக் கோபுரத்தின் உச்சியில் இருந்து கிருஷ்ணராஜசாகர் அணையைப் பார்வையிடும் வகையில் காட்சிமாடம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.



அணையின் நீர்த்தேக்கத்துக்கு அருகில் புதிதாக ஒரு ஏரி வெட்டப்படும் என்றும், இந்தத் திட்டத்துக்கான மதிப்பீடு ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் என்றும் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். இதற்கான நிலம் வழங்குவதைத் தவிர அரசு இதில் எந்த முதலீடும் செய்யாது என்றும் சிவக்குமார் குறிப்பிட்டார்.