பெங்களூரு: ஒரு அரிய வழக்கை விசாரித்த, கர்நாடக உயர்நீதிமன்ற பிரிவு, காணாமல் போன ஒரு நபர் தொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்ய மறுத்ததால், காலாபுராகியில் உள்ள பஜார் காவல் நிலையத்தின் அதிகாரிக்கு (SHO),  காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள சாலையை ஒரு வாரம் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலாபுராகி தாலுகாவில் உள்ள மினாஜி தாண்டாவைச் சேர்ந்த தாராபாய் (55) தாக்கல் செய்த ஆட்கொண்ணர்வு மனு  மீதான விசாரணயை மேற்கொண்ட நீதிபதிகள் எஸ்.சுனில் தத் யாதவ் மற்றும் பி கிருஷ்ணா பட் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. அக்டோபர் 20 ம் தேதி காணாமல் போன தனது மகன் சுரேஷை ஆஜர்படுத்த ஸ்டேஷன் பஜார் போலீசாருக்கு அறிவுறுத்தல் கோரி அவர் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். நவம்பர் 3 ம் தேதி சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


கர்நாடாகாவில் (Karnataka), தாராபாய் தனது மகன் கடத்தப்பட்டார் என்ற புகாரை அளிக்க  காவல் நிலையத்தை அணுகினார். இதனை காவல் நிலைய அதிகாரியும் ஒப்புக்கொண்டதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதிகாரி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த குற்றம் அவரது அதிகார எல்லைக்கு வெளியே நடந்திருந்தால், மேலதிக விசாரணைக்கு அவர் அந்த எஃப் ஐ ஆரை, சம்பந்தப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றியிருக்க வேண்டும்.


ALSO READ | MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look ...!! 


 


இது தொடர்பாக காவல் துறை அதிகாரி விதிகளை பின்பற்றாமல், காவல் நிலையத்தில் இது பற்றிய எந்த குறிப்பும் எழுதுவைக்கவில்லை. முதல் தலவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை, இதன் விளைவாக மனுதாரர் மற்றும் அவரது மகனின் உரிமைகள் பாதுகாகப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.எச்.ஓவின் நடத்தை குறித்து பெஞ்ச் கேள்வி எழுப்பியது. 


செய்த தவறுக்கு பரிகாரமாக சில சமூக சேவை செய்கிறேன் என காவல் துறை அதிகாரி முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட பெஞ்ச், தனது காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள சாலையை ஒரு வாரம் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டது. “மாண்புமிகு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எனது காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள சாலையை ஒரு வாரம் சுத்தம் செய்வதன் மூலம், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கி, அதை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்று இதன்மூலம் கூறுகிறேன். எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யாததற்கு மன்னிப்பு கோருகிறேன், எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன், ”என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


இந்த வழக்கின் காவல் நிலையங்களின் செயல்பாடுகளில் குழப்பம் நிலவுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தனிநபர்களின் உரிமையை பாதுகாக்க, முழுமையான சுதந்திரம் வழங்க, CrPC கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை காவல் துறையினர் கடைபிடிக்காததால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


ALSO READ | MGR: இதய தெய்வமாக சரித்திரம் படைத்து கொடுத்துச் சிவந்த கரங்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR