சீன நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவல் காணப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கோவிட் நிலைமை குறித்து கர்நாடக சுகாதாரத் துறை சிறப்புக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக பெங்களூரு மற்றும் மங்களூருவில் இரண்டு மருத்துவமனைகளை தயார் செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனை மற்றும் மங்களூரில் உள்ள வென்லோக் மருத்துவமனை ஆகியவை அடங்கும். இது தவிர, பொது மக்களுக்காக அரசு பல விதிகளை அமல்படுத்தியுள்ளது.


சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மூடிய திரையரங்கில் யாராவது படம் பார்க்கச் சென்றால், அங்கு கட்டாயம் முகமூடி அணிய வேண்டும். இது தவிர பள்ளி, கல்லூரிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, பள்ளி-கல்லூரிகளில் சானிடைசர் ஏற்பாடு மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, புத்தாண்டை முன்னிட்டு உணவகங்களில் மாஸ்க் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பெங்களூரு எம்ஜி சாலையில் கொண்டாட்டங்களின் போது கூட மாஸ்க் அணிய வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா... தொடங்கிவைத்தார் விஞ்ஞானி மயில்சாமி 


கர்நாடகாவின் பெலகாவி சட்டசபை கூட்டத்தொடரின் போது நடந்த கூட்டத்தில் கொரோனா தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் முடிவு செய்யப்பட்டன. இந்த புதிய நிபந்தனைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஆகியோர் கூறுகையில், இது தொடர்பான அனைத்து உத்தரவுகளும் மாலைக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.


மேலும் படிக்க | மீண்டும் லாக்டவுன் - இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கு ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ