கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தும்குர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் 105 நகராட்சி அமைப்புக்களுக்கு நடைபெற்றது. அதில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது. மூன்று மாநகராட்சி, 29 சிட்டி முனிசிபல் கவுன்சில்கள், 52 டவுன் முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 20 டவுன் பஞ்சாயத்துகள் ஆகியவற்றிற்கான தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(திங்களன்று) நடைப்பெற்று வருகின்றது.


இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளில் காங்கிரஸ் 982 வார்டுகளையும், பாரதிய ஜனதா 927 வார்டுகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 375 வார்டுகளிலும் கைப்பற்றி உள்ளது. 105 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில், இதுவரை மொத்தம் 2,664 வார்டுகளுக்கான இறுதி முடிவு வெளியாகியுள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.


இந்நிலையில், தும்குர் பகுதியில் பாஜக முன்னிலை வகித்தது. ஆனால் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இனாயத்துல்லா கான் வெற்றி பெற்றார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள். அப்பொழுது சில மர்ம நபர்கள், அவர்கள் மீது ஆசிட் வீசினார்கள். அதில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 10 பேர் காயம் அடைந்துள்ளார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.