சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் 982 இடங்களைப் பெற்றதன் மூலம் பி.ஜே.பியை பின்னுக்கு தள்ளி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தமுள்ள 2664 இடங்களில், காங்கிரஸ் 982 இடங்களை வென்றது, பாரதிய ஜனதா கட்சி 929 மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பின்மை) 307 இடங்களை வென்றது.


கர்நாடக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சியின் வளர்ச்சி கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும், பா.ஜ.க.வின் 'ஜுமலாஸ்' (சொல்லாட்சிக் கலை) நிராகரித்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. 


காங்கிரசின் தலைமைச் செய்தித்தொடர்பாளரான ரண்டீப் சுர்ஜேவாலா, கர்நாடகா மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கர்நாடக மக்கள் காங்கிரசில் மீது நம்பிக்கை வைத்திருப்பதை உள்ளாட்சி தேர்தலில் முதலாவது இடத்தை கொடுத்து மீண்டும் நிருபத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


 



கடந்த மாதம் கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் 105 நகராட்சி அமைப்புக்களுக்கு நடைபெற்றது. அதில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது. மூன்று மாநகராட்சி, 29 சிட்டி முனிசிபல் கவுன்சில்கள், 52 டவுன் முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 20 டவுன் பஞ்சாயத்துகள் ஆகியவற்றிற்கான தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(திங்களன்று) நடைப்பெற்றது.