மேகதாதுவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகிறார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்நிலையில், இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக வரும் 7 ஆம் தேதி நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை கர்நாடக அரசு தொடங்கியது. பொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 


விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், மேகதாதுவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.