புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை (Former PM Manmohan Singh) பாகிஸ்தான் (Pakistan) அழைத்துள்ளது. அவர்களின் அழைப்பு மன்மோகன் சிங் ஏற்பாரா? ஏற்கமாட்டாரா? என்ற விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. சீக்கிய பக்தர்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan) எல்லையில் அமைக்கப்பட்டு உள்ள கர்தார்பூர் (Kartarpur) நடைபாதை நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து முன்னால் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த அழைப்பிதழ் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி (Shah Mehmood Qureshi) தகவலை வழங்கியுள்ளார். பாகிஸ்தானின் அழைப்பை மன்மோகன் சிங் ஏற்க மாட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தானின் புதிய தந்திரம். ஆனால் தோல்வியடையும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி கூறுகையில், "கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க விரும்புகிறோம். அவர் சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதியாக உள்ளார். நாங்கள் அவருக்கு முறையான அழைப்பிதழை அனுப்பி உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 


ஆனால் பாகிஸ்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறுமா? பெறாத? என பொறுத்திருந்து பாப்போம். 


ஆனால் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் பாகிஸ்தானின் அழைப்பை முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்க மாட்டார் எனக் கூறப்பட்டு உள்ளது. 


சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. 


இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழிதடம் அமைப்பது என இருநாடுகளுக்கும் இடையே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.


அதன்படி இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.