கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பஞ்சாபில் TSPL எனும் நிறுவனம் அமைத்து வரும் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை  மீறி விசா பெற்றுத் தர, TSPL நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பணிகள் தாமதமானதால் சீனப்பணியாளர்களின் விசாவை நீட்டிக்க TSPL நிறுவனம் மீண்டும் பாஸ்கர ராமனை அணுகியதாகவும் சிபிசி கூறியுள்ளது.


மேலும் படிக்க | சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் கார்த்தி சிதம்பரம்?


இது தொடர்பாக பாஸ்கர ராமனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. உச்சநீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் நேற்று நாடு திரும்பினார். நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனைத் தொடர்ந்து, இன்று சிபிஐ விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். முன்னதாக, கார்த்தி சிதம்பரம் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால், கார்த்தி சிதம்பரத்தை வரும் 30-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்ததோடு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு வரும் 30-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


மேலும் படிக்க | இறுகும் பிடி... கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR