ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிதர்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையவில்லை என்றும், பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிதர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என ஆளுநர் சத்பால் மாலிக் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளர்ச்சியின் புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநகர் ஷெர்-இ-காஷ்மீர் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார். 


இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதேபோல ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள உள்ள ஷெர்-ஐ-காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


அப்பொழுது பேசிய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியது, கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களின் உணவு, உடைகள் மற்றும் இருப்பிடம் குறித்து எந்தவித கவனமும், இங்குள்ள தலைவர்கள் செலுத்தவில்லை என்று குற்றம்சாடினார்.


தற்போது காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளர்ச்சியின் புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும், இங்கு நல்லாட்சி அதிகரிக்கும், உள்ளூர் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். இது மட்டுமல்லாமல், இந்த மாற்றங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் சமத்துவ உணர்வையும் கொண்டு வரும்.


ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளம் எந்த விதத்திலும் ஆபத்தில் இல்லை அல்லது அது சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று கூறினார். காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப்பட்டதால், இங்கு உள்ள மக்களின் அடையாளம் இழக்கப்படும் என்று யாரும் கவலைப்படக்கூடாது. மாநில மக்கள் அனைவருக்கும் பிரதிநிதிகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.


லடாக் குறித்து ஆளுநர் சத்பால் மாலிக் தனது கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம், அங்குள்ள மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லடாக்கிற்கு ஒரு தனித் துறையை உருவாக்கியதாக அவர் கூறினார். லடாக்கிற்கு ஒரு தனி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது, இது அங்குள்ள உள்ளூர் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று அவர் கூறினார்.


லேவில் உள்ள விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது உள்ளது என்று கூறினார். இது தவிர, கார்கில் வணிக விமான நிலையத்திற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. அடிமட்ட ஜனநாயகம் மூலம் மக்களை மேம்படுத்துவதே அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.


பயங்கரவாதம் குறித்து பேசிய ஆளுநர் சத்பால் மாலிக், பயங்கரவாதிகள் மீது சகிப்புத்தன்மையற்ற கொள்கை தொடரும் என்று கூறியுள்ளார். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் குழுக்களின் புதிய ஆட்சேர்ப்பு குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.


ஜும்மே தொழுகைக்குப் பிறகு அடிக்கடி கல் வீசும் சம்பவங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக ஆளுநர் சத்பால் மாலிக் தெரிவித்துள்ளார். அலைந்து திரிந்த இளைஞர்கள் விரைவாக பிரதான நீரோட்டத்திற்கு திரும்பி வருகின்றனர். எல்லையைத் தாண்டி ஊடுருவலைத் தடுக்க பன்முக அணுகுமுறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம் என்று அவர் கூறினார்.


காஷ்மீர் பண்டிதர்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையவில்லை என்று ஆளுநர் சத்பால் மாலிக் தெரிவித்துள்ளார். பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிதர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் காஷ்மீர் திரும்புவது அனைவரின் ஆதரவால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.