காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில்  3 பாதுகாப்பு படையினர் உட்பட 72 பேர் பலியாகினர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் வன்முறை நீடிப்பதால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றது.  ஆனால் பிரிவினைவாதிகள் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டனர். 


பிறகு ராஜ்நாத் சிங் இதுகுறித்து கூறுகையில்:- பிரிவினைவாதிகளுடன் பேச சில உறுப்பினர்களை அனுப்பினோம்.ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். பிரிவினை வாதிகள் விரும்புவது காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிப்பது மட்டுமே அங்கு வாழும் மக்களின் மனித நலத்தை அல்ல. வன்முறைகளை இடுப்பவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேற்றத்திற்கான ஒரே வழி. இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் எப்போதுமே ஒரு பகுதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனவும், அங்கு அமைதி திரும்புவதற்கான முயற்சிகள் தொடர்கின்றது எனவும் தெரிவித்தார்.


இந்நிலையில் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார். இதனையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் ராஜ்நாத்சிங் காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளனர்.