ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் வாழ்த்து தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


மிர்வாய்ஸ் உமர் பரூக் தனது டுவிட்டர் பக்கத்தில், பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்க முடிகிறது. பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 


 



 


இதுவரை இந்தியா வெற்றி பெற்ற எந்த ஓரு போட்டிக்கும் வாழ்த்து தெரிவிக்காத மிர்வாய்ஸ் உமர் பரூக், பாகிஸ்தானுக்கு வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.  மிர்வாய்ஸ் உமர் பரூக்கின் இத்தகைய செயல் அவரது உண்மை சுயரூபத்தை வெளிக்காட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.