வெளியானது புதிய கல்வி கொள்கை!! அனைத்து மாநிலங்களில் இனி இந்தி கட்டாயம்
இந்தியா முழுவதும் மூன்று மொழி கொள்கை மூலம் இந்தி கட்டாயம் என கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கை மூலம் பரிந்துரை.
டெல்லி: மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரை.
புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்திற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்தை ஒப்படைத்தது. 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்வி கொள்கை திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலி வெளியிட்டார்.
அதில், 3 மொழி கொள்கை என்பது கட்டாயம் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இனி இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்தும் தெரிவிக்கலாம் என்று nep.edu@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.