Kerala Assembly Election 2021: பாலக்காடு தொகுதியில் Metroman ஸ்ரீதரன் போட்டி

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில். 15.8 சதவீத வாக்குகள் பெற்று பாஜக, ஒரு தொகுதியில் வென்றது.
கேரளாவில் உள்ள 140 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரளா மாநிலத்தை பொருத்தவரைவ்ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில். 15.8 சதவீத வாக்குகள் பெற்று பாஜக, ஒரு தொகுதியில் வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் (Congress) மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே நேரடி போட்டி உள்ள நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்குடன் பாஜக களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று கூடிய நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது
பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பிற உறுப்பினர்கள் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று கேரள மாநில பாஜக பட்டியலை வெளியிட்டார். மொத்தமுள்ள 140 கேரள சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 25 இடங்களில் அதன் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் போட்டியிடுகிறார். நேமம் தொகுதியில் கும்மன் ராஜசேகரன் மற்றும் திருச்சூர் நடிகர் சுரேஷ் கோபியும் போட்டியிடுகின்றனர்.
ALSO READ | TN Assembly Election 2021: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR