சமீப காலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற, அதிகமாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றான கேரள பிஷப் பிராங்கோ மூலக்கல் வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி ஒருவர், பாதிரியார் பிராங்கோ மூலக்கல் பாலியல் வங்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, மூலக்கல் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதிரியாரை விடுவித்து கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018 இல் கன்னியாஸ்திரி அளித்த புகார் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவச் செய்தது. புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக வந்த மற்ற பல கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோ மூலக்கலைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் அமர்ந்தனர்.


2014 மற்றும் 2016 க்கு இடையில் முல்லக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிஷப் செப்டம்பர் 21 அன்று கைது செய்யப்பட்டார். ஐந்து கன்னியாஸ்திரிகள் பகிரங்கமாக அவரைக் கைது செய்யக் கோரி எர்ணாகுலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.


பிராங்கோ மூலக்கல் மீது பலாத்காரம் உள்ளிட்ட 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு 39 சாட்சிகளை விசாரித்தது.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


காவல்துறையில் புகார் அளிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் பல உள் புகார்களைக் கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு எந்தெ பதிலும் கிடைக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறியது. அவர் குற்றம் சாட்டியபோது அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.


இந்த வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். எனினும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


முலக்கலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 83 சாட்சிகள் உள்ளனர். சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மூன்று பிஷப்புகள், 11 பாதிரியார்கள், 22 கன்னியாஸ்திரிகள் உட்பட 83 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ALSO READ | முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR