கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் மரணம்! அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
Kerala Boat Accident: மலப்புரம் மாவட்டம் தனூர் - பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து. இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
Kerala Boat Accident: ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகே 35 பயணிகளுடன் சென்ற பொழுது போக்கு சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 22 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காவல்துறை, கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள்
பரப்பனங்காடி புத்தங்கடபுரத்தைச் சேர்ந்த சைதலவியின் பிள்ளைகளான சப்னா (7), ஹஸ்னா (18); தனூர் ஓலபீடிகையைச் சேர்ந்த சித்திக் (35), இவரது மகள் பாத்திமா மின்ஹா (12), மகன் பைசான் (4); ஆவயில் கடற்கரையைச் சேர்ந்த குன்னும்மாள் ஜாபீர் மனைவி ஜல்சியா ஜாபிர் (40), இவரது மகன் ஜரீர் (12); பெரிந்தல்மன்னா பட்டிக்காட்டைச் சேர்ந்த நவாஸ் மகன் அஃப்லா (7); பெரிந்தல்மன்னாவை சேர்ந்தவர் அன்ஷித் (9); அவ்வாயில் கடற்கரையை சேர்ந்தவர் ரசீனா; சிரமங்கலத்தை சேர்ந்தவர் சிவில் போலீஸ் அதிகாரி சபருதீன் (38); புதிய கடப்புரத்தை சேர்ந்தவர் ஷாம்னா கே (17); முண்டுபரம்பைச் சேர்ந்த நிஹாஸ் மகள் ஹாதி பாத்திமா (7); பரப்பனங்காடியைச் சேர்ந்த சிராஜின் குழந்தைகள் ருஷ்தா, நயிரா, சஹாரா; பரப்பனங்காடியைச் சேர்ந்த சைதலவி மகள் சஃப்லா ஷெரின் (17); செட்டிப்பாடியை பூர்வீகமாக கொண்ட ஆதில் ஷெரி மற்றும் ஆயிஷா பி, அர்ஷன்; பரப்பனங்காடியைச் சேர்ந்த சீனத் (45), அட்னான் (9).
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு!
படகில் பயணம் செய்த பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியைச் சேர்ந்தவர்கள். படகு கவிழ்ந்து முற்றிலும் மூழ்கியதாக கூறப்படுகிறது. படகில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும், மூடப்பட்ட படகு கதவும் இணைந்து ஆபத்தை அதிகப்படுத்தியது. கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணியில் பங்கேற்ற நபர் ஒருவர், பார்வைத் தன்மையின்மை மற்றும் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக மீட்புப் பணியை மேற்கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட நபர்கள் பரப்பனங்காடியில் உள்ள நஹாஸ் மற்றும் ஜே.எஸ்.மிஷன் போன்ற மருத்துவமனைகளிலும், திருரங்கடி தாலுகா மருத்துவமனையிலும், தனூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனுர் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதனை அடுத்து இன்று நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூரப்புழா ஆறு அரபிக்கடலில் சேரும் பரப்பனங்காடி-தனூர் நகராட்சி எல்லையில் ஒட்டும்புரத்தில் முகத்துவாரத்தின் கரையில் தூவல் தீரம் அமைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ