சபரிமலை பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்: பினராயி விஜயன்...
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த, இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதயைடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர், செப்டம்பர் 28 ஆம் தேதி இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு தான் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதாவது, தரிசனத்துக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவாகும். இந்த உத்தரவுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் கேரள அரசு எடுக்க முடியாது.
நாங்கள் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், கோர்ட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது’ என தெரிவித்தார்.