Kerala Bumper lottery: கேரளா லாட்டரி ரிசல்ட் அறிவிப்பு, முதல் பரிசு ரூ16 கோடி
Kerala lottery result 19.1.23: கேரள கிருஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கேரளா லாட்டரி முடிவுகள் மற்றும் அனைத்து விவரங்களையும் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்:
Christmas bumper Lottery 2023: கேரள கிருஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி முடிவுகள் ஜனவரி 19, 2023 இன்று (வியாழன்) அறிவிக்கப்பட்டன. டிக்கெட் எண் எக்ஸ்டி 236433 முதல் பரிசான ரூ.16 கோடியை வென்றது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி ஆண்டுதோறும் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்படுகிறது.
கேரளா லாட்டரி புத்தாண்டு பம்பர்
கேரள கிருஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் BR-89 லாட்டரி முடிவு இன்று (ஜனவரி 19, 2023) அறிவிக்கப்பட்டது. புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடங்கியது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரியின் குலுக்கல் இன்று திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது.
கேரளா லாட்டரி புத்தாண்டு பம்பர் டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும்.
டிக்கெட்டுகள் 10 தொடர்களில் உள்ளன: XA, XB, XC, XD, XE, XG, XH, XJ, XK, XL.
கேரளா புத்தாண்டு பம்பர் 2023 முடிவு
* கேரளா புத்தாண்டு பம்பர் BR-89 லாட்டரியின் முதல் பரிசு ரூ.16 கோடி ஆகும்.
* கேரள புத்தாண்டு பம்பர் லாட்டரியின் இரண்டாம் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
* பம்பர் லாட்டரியின் மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் ஆகும்.
* 4வது பரிசு: ரூ 5,000/- (64,800 பரிசுகள் வரை)
* 5வது பரிசு: ரூ 3,000/- (48,600 பரிசுகள் வரை)
* 6வது பரிசு: ரூ 2,000/- (64,800 பரிசுகள் வரை)
* 7வது பரிசு: ரூ 1,000/- (2,10,600 பரிசுகள் வரை)
* 3 லட்சம் மதிப்பிலான ஒன்பது ஆறுதல் பரிசுகளும் உள்ளன.
கேரளா லாட்டரி முடிவு கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர்
கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முடிவுகளை கேரளா லாட்டரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்: keralalotteries.com.
பரிசு வென்றவர்கள், கேரள அரசிதழில் வெளியிடப்பட்ட கேரள லாட்டரி முடிவுகளுடன் வெற்றி பெற்ற எண்களைச் சரிபார்த்து, வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பரிசுத் தொகை 5,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வெற்றியாளர்கள் அதை கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடையிலும் பெறலாம். 5,000 ரூபாய்க்கு மேல் தொகை இருந்தால், லாட்டரி வெற்றியாளர்கள் தங்களது சீட்டுகளை அரசு லாட்டரி அலுவலகம் அல்லது வங்கியில் அடையாளச் சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த பங்குகளின் முதலீடு செய்தால் இலாபம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ