கொரோனா பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. மரணத்திற்கு பிறகும் சாதியும் மதமும் விட்டு வைக்காத சம்பவங்களை பார்த்து மனம் சலித்து போயிருக்கும் காலத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்படும் என்பதற்கு உதாரணமாக கேரளாவில் ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்த 86 வயது முதியவர். கே.ஸ்ரீநிவாஸ் என்ற அந்த முதியவரின் உடலை தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறையில் எரிக்க செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம் அனுமதி கொடுத்தது. இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.


Also Read | Corona Update: 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.86 லட்சம் பேருக்கு கோவிட் 


தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு புலம் பெயர்ந்த ஸ்ரீநிவாஸ் எதாதுவா (Edathua Village) என்ற கிராமத்தில் வசிக்கிறார். இவரது குடும்பத்தினர் 5 பேரும் கொரோனா பாசிட்டிவ் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கனமழையினால் இவரது வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்கியிருந்தது. கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஸ்ரீநிவாஸ் இறந்துவிட்டார்.


எதாதுவா கிராமத்தில் பொது எரியூட்டு மேடை கிடையாது. இந்த சமயத்தில் என்ன செய்வது என்று அனைவரும் திகைத்துப் போனார்கள். 


எனவே எதாத்துவா கிராம அதிகாரி எம்.டி.தாமஸ் ஸ்ரீநிவாஸ் உடலை எரிக்க தேவாலயத்தின் திருத்தந்தை மேத்யூ சூரவாடியிடம் அனுமதி கேட்டார். ஆலோசனை நடத்திய அவர், ஸ்ரீநிவாஸின் உடலை தேவாலயக் கல்லறையில் உடலை எரிக்க அனுமதி கொடுத்தார். 


Also Read | கொரோனாவை கட்டுப்படுத்துமா ஆந்திராவின் கத்திரிக்காய் சொட்டு மருந்து?


கொரோனா பெருந்தொற்று காலத்தில் நெருக்கடியான சமயத்தில் செய்யப்பட்ட உதவி பாதிரியார் மேத்யூவின் செயல். ஒரு இந்துவின் உடலை எரிக்க அனுமதி தந்ததன் மூலம் கிறித்துவ மதம் போதிக்கும் கருணை, அன்பு என்ற தத்துவத்தை (philosophy of Christianity) நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாக பாதிரியார் மேத்யூ தெரிவிக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். “செயிண்ட் ஜார்ஜ் தேவாயலத்தின் இந்த சிறப்பான செயல், அதாவது ஒரு இந்துவின் உடலை கல்லறையில் எரிக்க அனுமதித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது” என்றார்.


Also Read | PSBB: உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு கலைக்கப்படும்-சுப்பிரமணியம் சுவாமி அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR