பாஜக தலைவர் நேற்று அமித்ஷா பேசியது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சட்ட சாசனத்துக்கு எதிரானதாக இருக்கிறது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா: கன்னூரில் உள்ள கட்சி அலுவலகத்தை நேற்று BJP தலைவர் அமித்ஷா திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் பேசுகையில், "கேரளாவில் மாநில அரசின் கொடூரத்திற்கு எதிராகவும் மத நம்பிக்கைகளை காப்பற்றவும் மாபெரும் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், BJP மற்றும் RSS தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உங்கள் உணர்வுகளுக்கு ஆதரவாக BJP முழுமையாக துணை நிற்கும் என்றும் கேரள மக்களுக்கும், ஐய்யப்பன் பக்தர்களும் எப்போதும் நாங்கள் துணை நிற்போம் எப கூறினார். 


மேலும், பெண்களுக்கென்றே தனி சிறப்புடன் பல கோவில்கள் உள்ளன. அங்கு ஆண்கள் அனுமிதக்கப்படுவதில்லை, அவர்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யவும் இல்லை' என்று அவர் கூறினார்.


BJP தலைவர் அமித்ஷா-ன் கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். "அமித்ஷா பேசியது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சட்ட சாசனத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது. நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய வகையிலான விஷயங்களை மட்டுமே நீதிமன்றங்கள் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்னும் அமித்ஷாவின் கருத்து அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருக்கிறது. சங்பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மையான நிறம் அவரின் பேச்சின் மூலம் தெரிகிறது.


பெண்களுக்கான சம உரிமையை கோயிலுக்குள் நுழைவதை வைத்து நிலை நாட்டக் கூடாது என்று அவர் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், சட்டத்தைக் கொண்டு வேற்றுமையை அழிக்கக் கூடாதா?. 


மனுநீதியில் இருக்கும் பெண் அடிமைத்தனத்தை அவர் தூக்கிப் பிடிக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. இதைப் போன்று பிற்போக்குத் தனமான கோட்பாடுகளுக்கு எதிராக மக்கள் சமூகம் எழுச்சிக் காண வேண்டும். அவர்கள் கேரளாவில் யாத்திரை நடத்த முயன்றனர். ஆனால் இறுதியில் என்ன ஆனது என்று அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு இங்கு இடமில்லை" என காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.