கனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகள் நிரம்பி வழிகின்றன. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடுக்கி அணையை பொறுத்தவரை கடந்த 1992-ஆம் ஆண்டு அணைகள் நிரம்பி மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு நலன் கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நெற்றி அணையின் 5 மதகுகள் திறக்கப்பட்டதால் கூடுதல் தண்ணீர் வெளியேறுகின்றனர். இதனால் செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 


 



ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். கேரளாவை பொருத்த வரை இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன.


 



இடுக்கி அணையில் இருந்து அதிகமான அதிகமான தண்ணீரை திறந்து விடப்படுவதால் இடுக்கி மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கபட்டு உள்ளது. கடந்த புதன்கிழமை மூனாரில் பிளம் ஜூடி ரிசார்ட்டில் தங்கி இருந்த 24 வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 50 சுற்றுலா பயணிகளை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.


 



கேரளா மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 24 அணையின் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்து விட்டது. இதனால் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை தயார் நிலையில் உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று காலையில் கூறியிருந்தார்.


 



கேரளாவில் ஏற்ப்பட்டு உள்ள பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. வெள்ள நிவாரணம் தொடர்பாக கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இது தொடர்பாக கேரளா முதல்-அமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை செய்தேன் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் நாளை வெள்ளம் ஏற்ப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட கேரளா வருகிறார்.