சொந்த வீட்டை இப்படி விடுவோமா? வெள்ள பாதிப்பு மக்கள் கேள்வி!
கேராளவின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
கேராளவின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
கேரளாவில் பொய்த மழையின் காரணமாக வரலாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கேரளாவின் கொங்கரிபிள்ளி அரசு பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டவர்கள், அங்கிருந்து வெளியேறுகையில் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
தற்போது கேரளத்தில் மழைநீர் தேக்கம் குறைந்து, இயல்பு வாழ்க்கை சற்றே திரும்பியுள்ள நிலையில் முகாம்களில் தங்கியவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
அதன்படி கொங்கரிபிள்ளி அரசு பள்ளியில் தற்காலிகமாக தங்கியவர்கள் வீடு திரும்புகையில் தாங்கள் தங்கியிருந்த பள்ளியினை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இப்பள்ளியில் சுமார் 1200 தங்க வைக்கப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, அந்த முகாமில் தங்கியிருந்த நபர் ஒருவர் தெரிவிக்கையில்... கடந்த 4 நாட்களுக்கு இந்த பள்ளி என் வீடாய் இருந்தது. என் வீட்டை எப்படி நான் அசுத்தமாக விட்டு வைப்பேன்? என கேள்வி எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.