கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: IAS அதிகாரி M Sivasankar கைது!!
தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் பங்கு இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும் மத்திய விசாரணை நிறுவனம் கூறியது.
திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் (M Sivasankar) புதன்கிழமை திருவனந்தபுரத்தில் அமலாக்க இயக்குநரக (Enforcement Directorate) அதிகாரிகளால் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். அங்கு அவர் திடீர் உடல்நல சிக்கல்களால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ED மற்றும் சுங்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிவசங்கருக்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சிவசங்கர் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி முன் ஜாமீன் மனு மீது உத்தரவை பிறப்பித்தது.
எனினும், அக்டோபர் 28 வரை அவரை கைது செய்வதிலிருந்து ED மற்றும் சுங்கத் துறையை நீதிமன்றம் தடை செய்தது.
ALSO READ: Kerala gold smuggling case: தான்சானியாவில் இருந்து கேரளா வரை நீளும் தங்கக் கடத்தல் பாதை…
ஜாமீன் மனுவை ED கடுமையாக எதிர்த்ததுடன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்து விசாரிப்பது முக்கியமானதாகி விட்டது என்றும் கூறியது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் பங்கு இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும் மத்திய விசாரணை நிறுவனம் கூறியது.
பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் (Swapna Suresh) செய்ததாகக் கூறப்படும் கடுமையான பொருளாதாரக் குற்றங்களுடன் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என்று தெரிவிக்கும் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையை ED சமர்ப்பித்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுங்கத் துறையும் ஜாமீன் மனுவை எதிர்த்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான கேள்விகளுக்கு சிவசங்கர் தெளிவான பதில்களை அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது.
சிவசங்கர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை என்ற பெயரில் மத்திய நிறுவனங்களால் தான் வேட்டையாடப்படுவதாகக் கூறினார். மேலும், தற்போது அரசாங்கத்தில் எந்தவொரு செல்வாக்குமிக்க பதவியையும் தான் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: Kerala Gold Smuggling: 8 மாதத்தில் 19 முறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டார் Swapna Suresh
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR