Kerala Covid Protocals: பொது இடங்களில் மக்கள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வாகனங்களில் செல்வோரும் தங்கள் முகம் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாயை மறைக்க வேண்டும்.


அனைவரும் பணியிடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும்போதும் மாஸ்க் அணியுங்கள். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | அணுசக்தி வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தால்? பாக் பிரதமர் அச்சம்


முன்னதாக கடந்த ஜன. 12ஆம் தேதி அன்று கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


கொரோனா தடுப்பு நெறிமுறையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, கடைகள், திரையரங்குகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை அதிகமானது. எனவே, கேரளாவிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், இந்தியாவில் 114 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2 ஆயிரத்து 119 பேர் சிகிச்சை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Budget 2023: நடுத்தர வர்க்கத்தினரின் டாப் எதிர்பார்ப்புகள் இவை, நிறைவேற்றுமா அரசு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ