கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பியதால், அணைகளில் இருந்த மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர வெளியற்றப்பட்டு வருகிறது. மேலும் கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. பல நிலச்சரிவுகள் ஏற்ப்பட்டதால் பாதிப்பு அகில அளவில் ஏற்பட்டு உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளத்தால் லட்சக்கணக்கான பேர் வீடுகளை இழந்துள்ளனர். பல பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரளாவுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதிலிருந்து கேரள அரசுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இதுக்குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, 100 ஆண்டுகளில் சந்திக்காத வெள்ளத்தை கேரளா எதிர்கொள்கிறது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் உயிர் இழந்துள்ளனர். 2,23,139 பேர் காணவில்லை. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தாங்க வைக்கபட்டு உள்ளனர். நீங்கள் செய்யும் உதவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். கேரளாவுக்கு நிதிஉதவி அளியுங்கள் என கூறியுள்ளார்.


நிதியுதவி அளிக்க விரும்பினால். இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://donation.cmdrf.kerala.gov.in/