கேரளாவிற்கு சிறப்பு நிதி தேவை; மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை..!
மழை, வெள்ள பாதிப்புகள் சீரமைப்புகளுக்கு 2,600 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்...!
மழை, வெள்ள பாதிப்புகள் சீரமைப்புகளுக்கு 2,600 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்...!
கேரள மாநிலம் முழுவதும், கனமழை காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்வேறு இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க வரும் 30 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2,600 கோடி ரூபாயை சிறப்பு நிதியாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த 600 கோடி ரூபாய் நிதி நேற்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.