கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. முன்னதாக 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது கேரளாவில் உள்ள மொத்த 14 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது


கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கபட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் இன்று மட்டும் இடுக்கி, மலப்புரம் மற்றும் திரிசூர் மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர்.



கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 30-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் அணைகளை ஒட்டி இருந்த கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால், கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பேரிட மீட்புக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. 



கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களாகும். ஏறக்குறைய கேரளா முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


 



முன்னதாக, கொச்சி விமான நிலைய சேவைகளை தற்காலிகமாக வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. விமான பாதைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நாங்கள் நீரை வெளியேற்ற கடுமையாக உழைத்து வருகிறோம். அனைவருக்கும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம் என விமானம் நிர்வாகம் கூறியுள்ளது. 


தொடர்புக்கொள்ள அவசர கட்டுப்பாடு அறை எண்: 0484 3053500, 2610094