ஆண்டுதோறும் கேரள அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதில் 25% மது விற்பனை மூலம் தான் கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது பூரண மது விலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த உம்மண்சாண்டி அறிவித்தார். அதன்படி புதிய மதுக்கடைகளை திறக்கஅனுமதி கொடுப்பதில்லை. 


ஆனால் அதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து கேரளாவில் மது விற்பனை நடந்து வருகிறது.


இந்நிலையில் கேரளாவில் மது அருந்துவதற்காக தற்போது உள்ள 21 வயது என்ற வரம்பை 23 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 


அதன்படி அமைச்சரவையின் பரிந்துரை கேரள கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அனுமதிக்கு பிறகு இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வரும்.