ஜலந்தர் தேவாலய பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போப்பாண்டவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் கோட்டயம்  குரவிலங்காடுவில் உள்ள கான்வெண்டை சேர்ந்த   கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ப்ராங்கோ  மூலக்கல்(54) என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை  கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து இருந்தார். கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க அமைப்புகளுக்கு எதிராக முதல் முறையாக நேற்று கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், பேராயர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஆனால் இந்த விவகாரத்தை தேவாலய நிர்வாகம் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் தமக்கு பணம் கொடுத்து பிரச்சினையை புதைக்க முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார். கத்தோலிக்க தேவாலயம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதால் இப்பிரச்சினையில் தலையிடுமாறு அவர் வாட்டிகனில் உள்ள போப்பாண்டவர் பிரான்சிசுக்கு ஏழு பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு தேவை என்றும் அந்த கடிதத்தில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, தம் மீதான புகார்கள் அபாண்டமானவை பேராயர் மறுத்துள்ளார். கத்தோலிக்க தேவாலயத்திற்கு எதிரான சிலர் இதன் பின்னணியில் இருப்பதாக அவர் மதரீதியான சர்ச்சையை கிளப்ப முயற்சித்துள்ளார். ஆயினும் பேராயருக்கு எதிராக கேரளத்தில் கண்டனப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன