bevQ செயலியுடன் மது விற்பனையை தொடங்கியது கேரள மாநிலம்...
தொழில் நுட்ப கோளாறுகளை கடந்து, bevQ செயலியுடன் கேரள மாநிலம் மது விற்பனையை மீண்டும் தொடங்குகிறது...
தொழில் நுட்ப கோளாறுகளை கடந்து, bevQ செயலியுடன் கேரள மாநிலம் மது விற்பனையை மீண்டும் தொடங்குகிறது...
மது விற்பனைக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் ஆப் (BevQ) பெவ்க்யூவை பதிவேற்றுவதில் தொழில்நுட்ப குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொழில் நுட்ப கோளாறுகளை கடந்து, bevQ செயலியுடன் மது விற்பனையை மீண்டும் துவங்குவதாக கேரள மாநிலம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, கூகிள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்ட BevQ செயலி, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட 2.25 பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.
முன்னதாக BevQ செயலினையி நிறுவிய பின்னர் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) வரவில்லை என்பது போன்ற குறைபாடுகளை சந்தித்தது. இதன் காரணமாக பல பயனர்கள் சீற்றம் அடைந்தனர். அதோடு, COVID-19 கட்டத்தில் சமூக விலகல் விதி முறையை மீறி கடைகளுக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பலரும் மதுக் கடைகளுக்கு வெளியே கூட்டமாக கூடினர்.
576 பார் ஹோட்டல்கள், 291 பீர் பார்கள் மற்றும் 301 அரசு நிலையங்கள் ஆகியவைக்கு மது, பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றை MRP விலையில் விற்பனை செய்ய கேரள அரசு அனுமதித்துள்ளது. BevQ செயலியை கொச்சியை சார்ந்த Faircode technologies என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. .
ஒரு ஒற்றை பயனர், அடையாளத்தின் அடிப்படை சரிபார்ப்பிற்குப் பிறகு, பயன்பாட்டின் டோக்கனிங் அமைப்பு மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அவர் மதுபானத்தை வாங்க முடியும். காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும், மேலும் பயன்பாட்டின் மூலம் முன்பதிவை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செய்ய முடியும். .
இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகமான தனிநபர் ஆல்கஹால் நுகர்வு உள்ளது மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தின் வருவாய்க்கு மதுவிற்பனை நிலையங்கள் பெரும் பங்களிக்கின்றன. மதுபான விற்பனை மூலம் கேரள மாநிலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.14, 500 கோடி வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழாக்கம் - நடராஜன் விஜயகுமார்