2 பெண்கள் தரிசனம்: பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் சபரிமலை நடை திறப்பு...

40 வயதான 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததால் அடைக்கப்பட்ட கோயில் நடை ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.....
40 வயதான 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததால் அடைக்கப்பட்ட கோயில் நடை ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது....
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்று காலை 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவத்தனர். இந்நிலையில், சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தததை அடுத்து இன்று நடை அடைக்கப்பட்டது. மேலும் தற்போது பெண்கள் சென்றதற்காக பரிகார பூஜை நடத்த உள்ளதாக தெரிகிறது. சன்னிதானத்திற்கு முன் உள்ள பக்தர்கள் அனைவரும் விலகி செல்லுமாறு மேல்சாந்தி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆச்சாரங்கள் குறித்து தேசவம் போர்டு ஆலோசனை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடத்துவதற்காக நடை அடைக்கப்பட்டதாகவும், பூஜை செய்த பின்னர் ஒரு மணி நேரத்தில் நடை மீதும் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.