கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. இவர் கரிவலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


மாணவர்களை பரிசோதித்ததில் அவர்கள் அனைவரும் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிறுமி தேவநந்தா சிகிச்சை பலனின்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சென்ற போலீஸார் அங்கு உணவு சமைத்தவரை கைது செய்ததுடன் கடைக்கும் சீல் வைத்தனர். மேலும், அந்த கடையில் சுகாதாரமற்ற நிலையில் உணவு சமைக்கப்பட்டதும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க | கேரளா ஆளுநர் ஆகிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா?


ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 



ஷவர்மா என்பது ரொட்டிக்குள் கோழி இறைச்சியை துண்டுகளாக்கி, அதனுடன் முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து பரிமாறப்படும் ஒருவகை துரித உணவாகும். குறிப்பாக பதின்பருவ இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 


க்ரில் ஷவர்மா, ப்ளேட் ஷவர்மா என்றெல்லாம் பல வகைகளில் இந்த உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதில் க்ரில் ஷவர்மா என்பது திறந்த வெளியில் தான் இருக்கும்.  வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலைகளில் இருந்து எழும் தூசிகளுக்கு இடையே இந்த வகை உணவு தயாரிக்கப்படுவதால் இயல்பாகவே இதில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | கேரளாவில் முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR