கேரளா ஆளுநர் ஆகிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா?

Kerala New Governor: தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Apr 21, 2022, 10:30 AM IST
  • தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட உள்ளதாக தகவல்
  • கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெலங்கானா ஆளுநராக வாய்ப்பு
  • பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக உள்ளதாக தகவல்
கேரளா ஆளுநர் ஆகிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா? title=

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் உள்ளார். மற்றொரு மூத்த தலைவரான இல.கணேசன் வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆளுநராக உள்ளார். 

இதனிடையே தெலங்கானா முதலமைச்சருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் தமிழிசை சவுந்திரராஜனை அம்மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் மட்டும் தொடர வைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தெரிகிறது. 

இந்த நிலையில் தான் ஹெச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பாஜக தலைமை ஹெச்.ராஜாவை டெல்லிக்கு வரவழைத்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின் - ஹெச்.ராஜா

H Raja

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட ஹெச்.ராஜா அதிரடி அரசியலுக்கு பெயர்போனவர். 1989-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த ஹெச்.ராஜா 2001-ம் ஆண்டு காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. 

இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மேலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காரைக்குடியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

சட்டமன்றம், நாடாளுமன்றம் என 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள ஹெச்.ராஜா ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். தமிழக சாரண சாரணியர் இயக்கத் தேர்தலில்  போட்டியிட்ட அவர் வெறும் 52 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக இயங்கி வரும் ஹெச்.ராஜா தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2020-ம் ஆண்டு ஹெச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஹெச்.ராஜாவின் அநாகரிக பேச்சும் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News